search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்பி"

    • லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள்.
    • நம் வீட்டிற்குள் புகுந்து யாராவது தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை.

    கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள் எதுவும் கிடைக்காவிட்டால் லவ் ஜிஹாத் செய்வார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். கடவுளை நேசிக்கும் ஒரு சன்யாசி கூறுகிறார், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில், தவறு செய்பவர்கள், பாவிகள் அனைவரையும் அழித்து விடுங்கள்,லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்க சரியான முறையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

    உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. நம் வீட்டிற்குள் யாராவது புகுந்து தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை. கத்திகள் காய்கறிகளை வெட்டுவது போல், வாயையும் தலையையும் வெட்டுகிறது.

    மிஷனரிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி அனுப்புவதன் மூலம், முதியோர் இல்லங்களின் கதவுகளை உங்களுக்காக நீங்கள் திறக்கிறீர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறிதும் தாமதிக்காமல் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்தார்.

    எந்தவித உபகரணமும் இல்லாமல் அவர் கழிவறையை சுத்தப்படுத்தியது அங்குள்ளவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். #ShyamaCharanGupta #BJPMP #joinedSamajwadi #LokSabhaElections2019
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் இந்த வேட்பாளர் தேர்வில் உள்ள அதிருப்தி காரணமாக முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர்.

    அசாம் மாநிலத்தில், பாஜக கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மா, கர்நாடக மாநிலத்தில் மூத்த தலைவர் கே.பி.ஷனப்பா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.



    இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியின் எம்பியான ஷியாமா சரண் குப்தா, பாஜகவில் இருந்து இன்று திடீரென விலகி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விலகி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக ஷியாமா சரண் குப்தா போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ShyamaCharanGupta #joinedSamajwadi #LokSabhaElections2019 #BJPMP
    குஜராத் மாநிலம் பதான் தொகுதி எம்.பியாக உள்ள லீலாதர் வகேலா மாடு முட்டியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். #BJP
    அகமதாபாத்:

    பா.ஜ.கவை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அங்கு தெருவில் சுற்றி திரிந்த பசு ஒன்று இவரை முட்டி தாக்கியுள்ளது.  தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட அவர் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.  இதனால் அவருக்கு இரு இடுப்பு எலும்புகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

    இதனை அடுத்து காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வகேலா சேர்க்கப்பட்டு உள்ளார்.  மூச்சு விடுவதற்கு அதிக சிரமம் உள்ளது என கூறிய அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ×